| 
5
 
5.     சாதகப் பறவைக் 
கிரும்புயல் துளியும் 
           சகோரத்தி 
னுக்கு திக்கும் 
       சந்திரன் விடும்கரமும் 
அம்புயத் திற்கேழு 
           தாம்பரித் தேர்இ 
ரவியும் 
       மேதக உறுத்தவத் 
திற்கருளும் அவ்வருள் 
           விளக்கத் தினுக்கு 
ழுவலும் 
       மேவரும் கல்விக்கு 
நுண்அறிவும் நுண்அறிவு 
           வீக்கத்தி 
னுக்கொ ழுக்கும் 
       நோதக இலாதமைந் 
தாங்கருள் வழிச்செலீஇ 
           நோய்ப்பிறவி 
போக்கு வார்க்கு 
       நோற்றவர் புராணம்இல் 
லாதமை தராதாம் 
           நுவன்றெம்மை 
ஆண்ட பெம்மான் 
       தீதகம் மதித்திடாச் 
சேவையர் குலாதிபன் 
           சிறுதேர் 
உருட்டி யருளே 
       சிறுகோல் எடுத்தரசு 
செங்கோல் நிறுத்தினோன் 
           சிறுதேர் 
உருட்டி யருளே 
    
[அ. சொ.] 
சாதகப் பறவை-இஃது ஒருவகைப்பறவை, புயல்-மேகம், சகோரம்-இதுவும் ஒருவகைப் பறவை, இதனை நிலா 
முகிப்புள் என்பர், உதிக்கும்-தோன்றும், கரம்-கதிர் ஒளி, அம்புயத்திற்கு-தாமரைக்கு, தாம்பரி-தாவும் 
குதிரை, இரவி-சூரியன், மேதகஉறும்-மேன்மைத்தன்மை பொருந்திய உழுவலன்பும்-பேரன்பும், எழுபிறப்பும் 
தொடர்ந்த அன்பும், மேவரும்-பொருந்துதற்கு அரிய, வீக்கம் - பெருக்கம், நோதகவு-துன்பம், 
கேடு, அமைந்தாங்கு-அமைந்ததுபோல, செலீஇ-சென்று, நோற்றவர்-தவம்புரிந்தவர், நுவன்று-பாடி, தீது, 
அகம்-உள்ளத்தின் தீமைக்குணம், இல்லாது அமை, தராது-இன்றி அமையாது, நோற்றவர்-சரியை, 
கிரியை, யோகம் ஞானங்களில் ஈடுபட்ட தொண்டர்கள், நுண்ணறிவு-கூர்மையான அறிவு. 
     விளக்கம் :
சாதகப்பறவை மழைத் துளியை உண்டு வாழும் இயல்பினது, இதனை வானப்பாடிப் பறவை 
 |