ஆதல
ஆதலின் இது வேண்டப்பட்டது”
என்றனர். மணக்குடவர் அன்புடைமையாவது, “தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவன் ஆதல்”
என்றனர். பழைய உரைகாரர், ‘தன் புதல்வரிடத்து அன்புடைமை, உயிர்களிடந்தோறும் உண்டாக வேண்டும்
ஆதலின் அன்புடைமை ஆயிற்று” என்றனர். பரிதியார், “அன்புடைமை ஆவது புதல்வரிடத்திலே, ஆத்மாக்களிடம்
தோறும் உண்டாக வேணும். ஆதலால் அன்புடைமை ஆயிற்று” என்றனர். “அன்பின்றேன் எவை இருந்தும்
பயன் இல்லை என்பதை வள்ளுவர் நன்கு உணர்த்தி யுள்ளனர். அன்புடையவர்கள் தம் என்பையும் ஈவன்
என்றும், ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடியைந்த வழக்காகும் என்றும், அவ்வன்பு
ஆர்வம் உடைமையையும், அவ்வார்வமுடைமை நண்பென்னும் நாடாச்சிறப்பையும் தரும் என்றும், உலகில்
இன்புற்றார் எய்தும் சிறப்பெல்லாம் அன்புற்று அமர்ந்த பயன்” என்றும், இவ்வன்பு அறத்திற்குமட்டும்
அன்றி, மறத்திற்கும் துணையாகும் என்றும், அன்பில்லாத உயிரை அறக்கடவுள் அழிக்கும் என்றும்,
உள்ளத்தில் அன்பில்லாதவர் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியாது என்றும், அகத்துறுப்பாகிய
அன்புதான் உறுப்பே ஒழிய, இடம் பொருள் ஏவல் முதலிய புறத்துறுப்புக்களால் பயன் இல்லை என்றும்,
அன்பின் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பு, அவ்வன்பு இல்லாத உடம்பு எலும்பின்மீது தோல்
போர்த்த உடம்புதான்’ என்றும் கூறித் தெளிவுபடுத்தி யுள்ளனர். கம்பரும் அன்பின் மாட்சியினை,
என்பென்ப தியாக்கை
என்ப துயிர்என்பது இவைகள்
எல்லாம்
பின்பென்ப அல்ல வேனும்
தம்முடை நிலையில் பேரா
முன்பென்ப உளதென்றாலும்
முழுவதும் தெரிந்த ஆற்றால்
அன்பென்ப தொன்றின்
தன்மை அமரரும் அறிந்த
தன்றால்
என்று பாடி இருத்தல் காண்க. விநாயகபுராணம்
இவ்வன்பை மறக்கல் பாற்று என்பதற்குரிய காரணத்தை “நொதுமலரும்
|