| 
என
 
என்று குறளும், ‘ தெள்ளிதின் 
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே,’ என்று நாலடியும், ‘கற்றாங்கறிந்து அடங்கி’ என்று நீதி நெறி 
விளக்கமும். 
    பையவே கற்றுக் கற்ற 
பண்பின ரோடு நாளும் 
    உய்யவே அளவளாவி 
உரைத்தவா நிற்றல்வேண்டும் 
என்று விநாயக புராணமும் 
கூறுதல் காண்க. கற்றலின் பயன் நிற்றல். அவ்வாறு நிற்கவில்லை எனின் இழிவு என்பதைப் பிரபு 
லிங்கலீலை, “சொல்லிய சொற்கள் கற்றீர் சொற்ற அந் நெறியில் நிற்கும் நல்லியல் இல்லை” 
என்று இடித்துரைக்கிறது.  இவ்வாறு நிற்கும் பண்பே நுண் அறிவுடைமை ஆகும்.  அறிவுடைமையைப்பற்றி 
விளக்க வந்த பரிமேலழகர், “கல்வி கேள்விகளினாய அறிவோடு உண்மை அறிவுடையன் ஆதல்” என்பர்.  
மணக்குடவர், “அறிவுடைமையாவது அறிவாவது இன்னது என்பதும், அதனால் ஆகிய பயனும் கூறுதல்.  இது கல்வியும் 
கேள்வியும் உடையராயினும் கேட்ட பொருளை உள்ளவாறு உணர்ந்தறிதல் வேண்டும்” என்றனர். 
    நாலடியார் நுண்ணறிவுடைமையினைத்தான் 
செல்வம் என்கிறது.  “நுண்ணுணர்வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப்படைத்த பெருஞ் செல்வம்” என்ற 
அடிகளில் இக் கருத்தைக் காண்க.  பழமொழி நானூற்றிலும் நுண்ணறிவின் மாட்சியினை, 
    அறிவினால் மாட்சிஒன் 
றில்லா ஒருவன் 
    பிறிதினால் மாண்ட 
தெவனாம்-பொறியின்  
    மணிபொன்னும் சாந்தமும் 
மாலையும் இன்ன 
    அணிலெல்லாம் ஆடையின் 
பின் 
என்று பேசுகிறது. 
 
    நுண்ணறிவுதான் இறுதிவரையில் 
காக்கும் கருவியாகும். மனத்தைச் சென்ற சென்ற இடங்கள் எல்லாம் செல்ல 
 |