New Page 1
டினர் வேளாளர். தம் உள்ளத்தில்
தீது இருக்குமானால் நாடோடியாகச் சென்ற பெண்ணை ஏற்றுக் கொண்டு, சேர நாட்டினரோடு மணமுடித்து மைத்துனக்
கேண்மையினைக் கொண்டிருப்பாரோ? இரார். ஆகவே வேளாளர் தீது அகம் மதித்திடாச் சேவையர் குலம்
என்பது பொருத்தமே.
(96)
6. எய்குன்ற வார்சிலைப்
பெருமான் உளத்துவகை
எய்த மறையோர்கள்
குழுமி
இயையஉப கரணம்எல்
லாம்தகச் சேர்த்தினிய
தென்னும்ஒரு தேத்த
மர்ந்து
பொய்குன்ற யாககுண்
டத்தழல் எழுப்பமேல்
போயபூம்
புகைவா னாடு
பொலியும்உச் சைச்சிரவம்
அயிராவ தம்தான்
பொறுத்த நிறம்மே
வச்செயா
மெய்குன்ற வந்தவா
றென்னெனகக் கற்பகம்
வெதும்பப்
புரிந்து பின்னும்
விண்ணா டடங்கவும்
நண்ணா அரம்பையர்
விழித்துணை
ஒருங்கி மைப்பச்
செய்குன்றை அம்பதிச்
சேவையர் குலாதிபன்
சிறுதேர்
உருட்டி யருளே
சிறுகோல் எடுத்தரசு
செங்கோல் நிறுத்தினோன்
சிறுதேர்
உருட்டி யருளே
[அ. சொ.] எய்-அம்பைச்
செலுத்தும், குன்றவார்ச்சிலைப் பெருமான்-மேருமலையையே நீண்ட வில்லாகக் கொண்ட சிவனார், உள்ளத்து-மனத்தில்,
உவகை-மகிழ்வு, எய்த-வர, குழுமி-கூடி, இயைய பொருந்த, உபகரணம்-யாகத்திற்கு வேண்டிய துணைக்
கருவிகள், தக-பொருந்த, தேத்து-இடத்து, குன்ற-நீங்க, வானாடு-தேவலோகத்தில்,
பொலியும்-விளங்கும், உச்சைச் சிரவம்-தேவ லோகக் குதிரை, அயிராவதம்-தேவலோக யானை, மெய்-உடல்,
|