பக்கம் எண் :

New Page 1

 

       சிறுதேர்ப் பருவம்

769

செயா-செய்து, வெதும்ப-வருந்த, நண்ணா-கூடி, அரம் பையர்-தேவமாதர், அடங்கவும்-முழுவதும்.

    விளக்கம் :  இறைவன் மேருவினை வில்லாகக் கொண்டவன் ஆதலின், குன்றவார் சிலைப் பெருமான் என்றனர்.  பொருப்பு வில்லார் கையினார், “குன்றம் வில்லா” என்று திருமுறைகளில் வரும் தொடரைக் காண்க.

    இறைவர் மேருவினை வில்லாகவளைத்துக்கொண்டது குறித்துப் பல விதக் கற்பனைகள் புலவர்கள் உள்ளத்தில் உதித்தன.

    அப்பர் இறைவர் மேருவினை வில்லாக, வளைத்த நிகழ்ச்சியினை உளத்தில் கொண்டும், இறைவர் இடப்பாகத்தில் உமை இருப்பதையும் மனத்தில் கொண்டும், ‘இறைவா நீமலையாம் வில்லை வளைத்து இடக்கையில் பிடித்து, அக் கையை முன் நீட்டி நிறுத்தி, வலக்கையில் அம்பைப்பிடித்து நாணை இழுக்கும் போது பின் நிறுத்தி, முப்புரம் எரிக்கச் சென்றனை இடக்கை உமா தேவின் கையன்றோ? வலக்கை உன்னுடைய தன்றோ? இந்நிலையில் முன் நிற்பது உமா தேவியின் கையாதலின் முப்புரம் எரித்தது உனது வீரத்தால் நிகழ்ந்து என்று எப்படிச் சொல்லக் கூடும்? நன்று நன்று உனது சேவகம் என, எள்ளி நகையாடுவார் போல,

        கற்றார் பயில்கடல் நாகைக்கா
            ரோணத்தெம் கண்ணுதலே
        விற்றாங் கியகரம் வேல்நெடுங்
            கண்ணி வியன்கரமேல்
        நற்றாள் நெடுஞ்சிலை
            நாண்வலித் தகரம் நின்கரமே
        செற்றார் புரம்செற்ற சேவகம்
            என்னைகொல் செப்புமினே

என்று பாடியுள்ளார். தகரம் என்னும் சீரின் தகரத்தை விட்டிசைக்க.  இன்றேல் வெண்டளை கெடும்.

    குமரகுருபரர் மேருவாகிய மலை ஏன் வளைந்தது என்பதனைத் தம் கற்பனைநயம் தோன்றக் கூறவந்த இடத்தில்,