| 
மட
 
    மட்டிட்ட புன்னையங் 
கானல் மடமயிலைக்  
    கட்டிட்டங் கொண்டான் 
கபாலீச்சரம் அமர்ந்தான் 
    ஒட்டிட்ட பண்பின் 
உருத்திர பல்கணத்தார்க் 
    கட்டிட்டல் காணாதே 
போதியோ பூம்பாவாய் 
என்று பாடி, எலும்பும் 
சாம்பலுமாக இருந்ததைப் பெண்ணுருவுடன் வெளிவரத் திருவருள் புரிந்தார்.  இதனைச் சேக்கிழாரும், 
    மன்னு வார்சடை 
யாரைமுன் தொழுது மட்டிட்ட 
    என்னும் நற்பதி 
கத்தினில் போதியோ என்னும் 
    அன்ன மெய்த்திரு 
வாக்கெனும் அமுதம்அவ் அங்கம் 
    துன்ன வந்துவந் 
துருவமாய்த் தொக்கதக் குடத்துள் 
எனப் பாடியுள்ளனர். 
    சிவனேசர் மிகமகிழ்ந்து 
புகலிவேந்தரைத் தம் மகளைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டினார்.  அதுபோது சண்பையர் 
கோன், 
     
மற்றவர் தமக்குவண் 
புகலி வாணர்நீர் 
    பெற்றபெண் விடத்தினால் 
வீந்த பின்னையான் 
    கற்றைவார் 
சடையவர் கருணை காண்வர 
    உற்பவித் தீதலால் 
உரைத காதென 
அருளினர்.  அதாவது இம்மாது 
என்னால் எழுப்பப்பட்ட காரணத்தால் எனக்குப் பெண் முறையாயிருத்தலின், மணத்தல் தக்கது அன்று 
என்பதாம்.  இவ்வாறு ஒரு பெண்ணைப் பெறும் பாக்கியம் பெற்றது திருஞானசம்பந்தர் திருமணம் முடித்துக் 
கொள்ளுதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி.  இதனை உட்கொண்டே  “ மடக்கொடியை*** மடப்பாவையை 
பிறப்பித்து “ எனப்பட்டது. மடப்பாவையை பிறப்பித்து “ எனப்பட்டது.  இவ்வடியில் திருமணம் இன்றியே 
பிள்ளையைப் பெற்றனர் என்னும் நயம் தோன்றுதல் காண்க.  அங்கம் பூம்பாவை உயிர்பெற்று 
உருவுடன் தோன்றிய நிலையினைச் சேக்கிழார் பாடும்பொழுது, 
 |