பக்கம் எண் :

New Page 1

770

             சிறுதேர்ப் பருவம்

வெண்ணிலவு கொழித்தெறிக்கும் செஞ்சடைமோ
    லியர்வீதி விடங்கர் ஆரூர்க்
கண்ணுதல்பொன் புயவரைசேர் தனவரைகள்
    இரண்டவற்றுள் கனக மேரு
அண்ணல்புய வரைக்குடைந்து குழைந்துதலை
    வணங்கிடுநம் அன்னை பார
வண்ண முலைத் தடவரைஅவ் வரைகுழையப்
    பொருவதல்லால் வணங்கி டாதே

என்றனர்.  அதாவது இறைவரது தோளுக்கு நிகராகாத காரணத்தால் நாணத்தால்  தலைவணங்கியதுபோல் மேரு வளைந்தது என்பதாம்.

    இறைவன்  எரிஓம்பலை   விரும்புதற்குக்   காரணம்,   அவ்வெரி   இறைவனாகிய   உரு என்பதனால் என்க.  “எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உரு” என்னும் அப்பர் வாக்கை அறிக.

    யாகாதி காரியங்களை மறையவர் செய்வதற்குப் பல காரணங்கள் உண்டு.  நாட்டில் வறுமை நீங்க யாகம் புரிவர்.  இதனைத் திருஞானசம்பந்தர்,

    கற்றாங்கு எரிஓம்பிக் கலியை வாராமே
    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்

என்று  குறிப்பிட்டுள்ளதைக்  காணவும்.     எனவே,  ஈண்டு  “பொய் குன்றயாகம் புரிந்தனர்” என்றனர்.

    யாக குண்டம் தக்க இடத்தில், திசை அமைப்புக்கள் பொருந்த அமைக்க வேண்டியது முறை ஆதலின், “இனிய தொன்றும் ஒரு தேத்து” என்றனர்.  யாகத்திற்கு வேண்டிய உபகாரணங்கள் தருப்பை, சமித்து, நெய், அகப்பை, ஓம திரவியங்கள் முதலானவை.  இவ்வாறு யாகப் பொருள்களைச் சேர்த்து யாகாதிகாரியங்களை வேதியர்கள் செய்வது இறைவன் மகிழவே ஆகும் என்பது, “பெருமான் உளத்து உவகை எய்த” என்ற தொடரால் விளங்குகிறது.  உச்சைச் சிரவம்,