பக்கம் எண் :

அவர

772

             சிறுதேர்ப் பருவம்

அவர்கள் பாட்டில் புகை தேவர் உலகு சென்று சில மாற்றங்களைச் செய்தது. என்பதாம்.

    இப்பாட்டில் குன்றத்தூர் மறையவர்கள் இறையவன் உவப்ப, யாகாதி காரியங்கள் செய்யும் பண்பாளர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிராம்மணர்கட்குரிய தொழில் ஆறு: அவை ஓதல் ஓதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் என்பன.  இவற்றுள் வேட்டல் என்பது யாகாதி காரியச்செய்தலாகும்.  இந்த யாகாதி காரியங்கள் செய்வதே தமது சீரிய கடமை என்பதைச் சுந்தரர், “கலிவலம் கெட ஆர் அழல் ஓம்பும்” “கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்” என்று புகழ்ந்து கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் “நெய் தவழ் மூவெரி காவல் ஓம்பும் நேர்புரி நூல் மறையாளர்” என்றும், ‘மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியரால்” என்றும், பிராமணர்கள் தீ மூன்று ஓம்பும்” என்றும் பாடி அறிவித்துள்ளனர்.

    பிராம்மணர்கள் இன்னின்ன அறிந்திருக்க வேண்டும் என்பதையும் திருஞான சம்பந்தர்,

    மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழ்இசையும்
        மலியும்ஆ றங்கம் ஐவேள்வி
    இணைந்தநால் வேதம்மூன் றெரியிரண்டு
        பிறப்பென ஒருமையால் உணரும்
    குணங்களும் அவற்றின் கொள்பொருள்
        குற்றமற்ற வையுற்றதும் எல்லாம்
    உணர்ந்தவர் வாழும்ஓம மாம்புலி
        ஊருடை யவர்வட தளிஅதுவே

என்று கூறியுள்ளனர்.

    நகரில் பிராம்மணர்கள் வாழ்வது ஒரு சிறப்பு என்பதை நமது வைதிக உலகம் எடுத்து இயம்பும்.  இதனைச் சேக்கிழார், “ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில்பதி கடவூர் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.