| 
ய
 
யினைப் பொழியாது, தேன் 
மழையினைப் பொழிகிறதே” என்று வியந்து ஆகாயத்தை நோக்கின என்னும் கற்பனை திரு பிள்ளை அவர்களின் 
நுண்ணறிவுத் திறனைக் காட்டுகின்றது.  இவ்வாறு அஃறிணைப் பொருள்கள் ஒன்றை ஒன்றாக மயங்கி ஆகாயத்தை 
நோக்குதலைத் திருஞான சம்பந்தர், 
  
புலனைந்தும் 
பொறிகலங்கி நெறிமயங்கி 
    அறிவழிந்திட் 
டைம்மேல் உந்தி 
அலமந்த போதாக 
அஞ்சேல்என் 
    றருள்செய்வான் 
அமரும் கோயில் 
வலம்வந்த மடவார்கள் 
நடமாட 
    முழுவதிர 
மழைஎன் றஞ்சிச் 
சிலமந்தி அலமந்து 
மரம்ஏறி 
    
முகில்பார்க்கும் திருவை யாறே 
   
 
என்று பாடியுள்ளார்.  
இப்பாடல் நினைவே, பிள்ளை அவர்களை இவ்வாறு பாடச் செய்தது என்பதில் ஐயம் உண்டோ? 
    நீர்நிலையில் அன்னங்கள் 
மிகுதியும் இருக்கும் என்பதைத் திருஞான சம்பந்தர் படம் எழுதிக் காட்டுவார்போல, 
செறிஇதழ்த்தா 
மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும் 
    இலைக்குடைக்கீழ்ச் 
செய்யார் செந்நெல் 
தெறிகதிர்ச் சாமரை 
இரட்டஇள அன்னம் 
    வீற்றிருக்கும் 
மிழலை ஆமே 
 
என்று பாடிக் காட்டினர். 
    கம்பரும் நீர் நிலையில் 
அன்னத்தின் மிகுதியினை, “சேலு கண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம் மாலுண்ட் நளினப் 
பள்ளி வளர்த்திய மழலைப்பிள்ளை காலுண்ட சேற்று மேதி, கன்றுள்ளிக் கனைப்பச் சேர்ந்த 
பாலுண்டு துயிலப்பச்சைத் தேரைதாலாட்டும், பண்ணை” என்ற பாடலால் விளக்கினர். 
    இப்பாடல் வழி குன்றத்தூரின் 
நீர் வளத்தைக் குறித்துள்ளார் ஆசிரியர்.        
 
(98) 
 |