பக்கம் எண் :

New Page 1

780

             சிறுதேர்ப் பருவம்

    சைவ சமயப் பெரியவர்கள் தோன்றும் காலத்து அகச் சமயத்தவர்கட்கு ஆனந்தமும், புறத் சமயத்தவர்கட்குத் துன்பமும் ஏற்படுதல் இயல்பு. இதனை நமது சேக்கிழார் திருஞான சம்பந்தர் புராணத்துள் நன்கு எடுத்து விளக்கியுள்ளனர்.

அருக்கன்முதல் கோள்அனைத்தும்
    அழகிய உச்சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
    பேணியநல் ஓரைஎழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
    தினசவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
    வைதிகமும் தழைத்தோங்க
தொண்டர்மனம் களிசிறப்பத்
    தூயதிரு நீற்றுநெறி
எண்திசையும் தனிநடப்ப
    ஏழுலகும் குளிர்தூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
    அந்தணர்ஆ குதிபெருக
வண்தமிழ்செய் தவம்நிரம்ப
    மாதவத்தோர் செயல்வாய்ப்ப,

திசைஅனைத்தின் பெருமைஎலாம்
    தென்திசையே வென்றேற
மிசைஉலகும் பிறஉலகும்
    மேதினியே தனிவெல்ல
அசைவில்செழும் தமிழ்வழக்கே
    அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்அறிவும்
    இடங்கொள்ளும் நிலைபெருக

அவம்பெருக்கும் புல்அறிவின்
    அமண்முதலாம் பரசமயம்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
    பாழ்படநல் ஊழிதொறும்