பக்கம் எண் :

 

       சிறுதேர்ப் பருவம்

787

இருக்கின்றனர்.  மாணிக்கவாசகர் நூற்களையும் ஆய்ந்து தமது நூலைப் பாடியிருக்கின்றனர்.  திரு. பிள்ளை அவர்கள் முப்புலவர் என்று குறிப்பிட்டதனால் மாணிக்க வாசகரைப் பிரித்துத் தனித்து இங்குக் குறிக்கப்பட்டது.

    திருஞான சம்பந்தர் தமது ஒவ்வோர் பதிகங்களின் எட்டாம் பாட்டில் இராவணனுக்கு அருள் செய்ததையும், ஒன்பதாவது பாடலில் மாலயன் தேடியதையும், பத்தாம் பாட்டில் சமண பவுத்தர்கள் பற்றியும் குறிப்பிட்டிருத்தற்குரிய காரணம் இன்னது என்பதைச் சேக்கிழார்,

மண்ணுலகில் வாழ்வார்கள்
    பிழைத்தாலும் வந்தடையின்    
கண்ணுதலான் பெருங்கருணை
    கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
    எடுத்துமுறித் திசைபாட
அண்ணவற் கருள்புரிந்த
    ஆக்கப்பா டருள்செய்தார்
தொழுவார்க்கே அருளுவது
    சிவபெருமான் எனத்தொழார்    
வழுவான மானத்தாலே
    மாலாய மாலயனும்
இழிவாகும் கருவிலங்கும்
    பறவையுமாம் எய்தாமை
விடுவார்கள் அஞ்செழுத்தும்
    துதித்துய்ந்த படிவிரித்தார்

வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
எதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்

என்று, கவின் உறப் பாடியுள்ளனர்.

    திருநாவுக்கரசர் தாம் பாடிய பதிகங்களில் ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாட்டில் இராவணனுக்கு இறைவன் அருள் புரிந்ததைக் குறித்துப் பாடியுள்ளனர்.