இதன
இதன் கருத்து, அறியாமையால்
அடாது செய்து, பின் தன் குற்றம் அறிந்து போற்றியவர்கட்கு இறைவன் அருள் செய்வன் என்பதாகும்
என்பதை நன்கு உணர்ந்து சேக்கிழார்,
இத்தன்மை நிகழ்ந்துழி
நாவின்மொழிக்கு
இறையாகிய அன்பரும்
இந்நெடுநாள்
சித்தம்திகழ்
தீவினை யேன்அடையும்
திருவோஇது”
என்று தெருண்டறியா
அத்தன்மையன் ஆய
இராவணனுக்
கருளும்
கருணைத்திறம் ஆனஅதன்
மெய்த்தன்மை அறிந்து
துதிப்பதுவே
மேல்கொண்டு
வணங்கினர் மெய்யுறவே.
என்று பாடியுள்ளனர்.
சுந்தரர் திருப்பாச்சிலாச்
சிராமத்தில் பாடிய பதிகத்தினை,
வைத்தனன் தனக்கே
தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சம்
ஒன்றின்றி
உய்த்தனன் தனக்கே
திருவடிக் கடிமை
உரைத்தக்கால்
உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர்
கோவணத்
தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர்
நச்சில ராகில்
இவரலா தில்லையோ
பிரானார்.
என்று தொடங்கித் திருக்கடைக்
காப்பினை,
ஏசின அல்ல இகழ்ந்தன
அல்ல எம்பெரு
மான்என் றெப்போதும்
பாயின புகழான்
பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப்
பன்னாள்
வாயினால் கூறி
மனத்தினால் நினைவான்
வளவயல் நாவலா
ரூரன்
பேசின பேச்சைப்
பொறுத்தி லராகில்
இவரலா திலையோ
பிரானார்.
என்று பாடியுள்ளனர்.
|