பக்கம் எண் :

இத

796

             சிறுதேர்ப் பருவம்

    இத்திருக்கயிலாய  பரம்பரையினைச்  சார்ந்தவர்கள்  சைவ  சித்தாந்த சாத்திரங்களை ஒட்டிப் பலநூல்களைச் செய்துள்ளனர்; புராணங்களையும் இயற்றியுள்ளனர்.

    ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவர் திருவிழீமிழலை புராணம் இயற்றினர்.  இவர்க்குப் பிறகு ஸ்ரீ தட்சணாமூர்த்தி தேசிகர், தசகாரியமா உபதேசப் பஃறொடை என்னும் தூலையாத்தனர்.  இவருக்குப்பின் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் தச காரியம், சன்மார்க்கசித்தியார் சிவாச்சிரம தெளிவு, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டை வெண்பா, நிட்டை விளைக்கம் அதிசயமாலை, நமச்சிவாய மாலை உபதேச வெண்பா என்னும் நூல்களை இயற்றினர், சிவஞான போத சிந்தனை என்னும் உரை நூலையும், பூப்பிள்ளை அட்டவணை என்னும் சிறு நூலையும் இயற்றியுள்ளனர்.

    ஸ்ரீமாசிலாமணி தேசிகர் திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ் நூலைச் செய்தருளினர்.  ஸ்ரீவேலப்பதேசிகர் காலத்தில் ஸ்ரீசாமிநாத முனிவர் திருவாவடுதுறை புராணத்தையும் திருப்பெருந்துறைப் புராணத்தையும் செய்தனர்.  பேரூர் ஸ்ரீ வேலப்ப தேசிகர் பஞ்சாக்கரப் பஃறொடை என்னும் நூலையும் இயற்றினர்.  திருச்சிற்றம்பல தேசிகரின் சீடர் ஸ்ரீசுந்தரலிங்க முனிவர் ஆதின கைலாய மான்மியமாம் திரு பெருந்துறைப் புராணம் என்னும் நூலைப் பாடியுள்ளனர்.

    மெய்கண்ட சாத்திரம் சிவஞானபோத முதலான பதினான்கு.  இவற்றிற்குத் துணையாக இருப்பவை பண்டாரயார் சத்திரங்கள் பதினான்கு.’  அளவதாம் ஸ்ரீதட்சணாமூர்த்தி தேசிகர் எழுதிய திருநூல்கள், ஸ்ரீஈசான தேசிகர் செய் தருளிய தசகாரியமும் பின்வேலப்ப தேசிகர் செய்தருளிய பஞ்சாக்கரப்பஃறொடையும், ஸ்ரீஅம்பலவாண தேசிகர் இயற்றிய பத்து நூல்களும் ஆகும்.  இவையும், இந்நூலைச் செய்களும் வாழவேண்டுமென்ற கருத்தில்தான் திரு.  பிள்ளை அவர்கள் “திருக்கயிலாயபரம்பரை உமாபதியின் புகழும் அவன் முனோர் பையம் புகழும் அவன், வழிவரும் நண்பு புனை