தவர
தவர் புகழும், இனிமேல்
வருபவர் நலம் புகழும் நீடு வழா” என்று வாழ்த்துக் கூறினர்.
இத்திருவாடுதுறையினைச்
சார்ந்த பெரியோர்களான பேரூர். ஸ்ரீ வேலப்ப தேசிகர், (இவர் சிவஞான முனிவரின் ஞானாசிரியர்)
ஸ்ரீ சிவஞான முனிவர், ஸ்ரீ கச்சியப் முனிவர்-மதுரகவி ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் தண்டவராயத் தம்பிரான்
சுவாமிகள் முதலியோரும் வாழவேண்டும் என்னும் கருத்திலும் இவ்வீற்றுவாழ்த்துப் பாவினைப்பாடியுள்ளனர்.
நந்தியம்
பெருமான், சனற்குமாரமுனிவர், சத்சதியஞான தரிசினிகள் இவ்விருசந்தான வழியில் பின்வருபவரும்
முன்னோர் புகழ் பெற்றது போலப் பெறக்கூடியவர் ஆதலின் “நண்பு புனைதவர் புகழும் இனிமேலும்
வருபவர் நயப் புகழும் நீடு வாழ” என்றனர்.
சேக்கிழார்
பெருமானார் புராணமே மாபுராணம் எனத்தாகும். திருத்தொண்டர் புராணத்துள் ஒருவர் புராணம் மட்டும்
இல்லை. தனி யடியார்கள் புராணமும், தொகை அடியார்கள் புராணமும்உள. ஒவ்வொருவர் வரலாறு புராணம்
என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு புராணத்தையும் சேக்கிழார் பாடும்போது அவ்வரலாற்றிற்குரிய
நாடு, நகர், ஆறு, மக்கள் வாழ்வு இவற்றை யெல்லாம் விடாது பாடியுள்ளனர். ஆகவே, அவர் நூல்,
மாபுராணம் தானே ! சேக்கிழாரே தமது புராணத்தை “எடுக்கும் மாக்கதை” என்றே குறிப்பிட்டுள்ளனர்.
மாக்கதை எனினும், மாபுராணம் எனினும் பெரிய புராணம் என்ற பொருளைத் தருவதே ஆகும். பெரிய
புராணம் என்ற பெயர்க்குக் காரணம், செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களைப் பற்றிய
புராணம் என்பதாம். பெருமையுடைய, பெரிய என்ற பொருள்களும் தருதலின் மாபுராணம் என்பதும்
பொருத்தமே.
|