New Page 1
முத்துப் பந்தர் பெற்றார்.
திருவாவடுதுறை மாசிலாமணி ஈஸ்வரரிடம் பொற்கிழி பெற்றுத் தந்தையார்க்கு ஈந்தார் திருமருகலில்
பாம்புகடித் திறந்த செட்டி மகனை எழுப்பினார். திருவீழி மிழலையில் படிக்காசு பெற்றுப் பஞ்சத்தால்
வாடிய அடியார்கள் உணவுண்டு உவக்கச் செய்தார். திருமறைக் காட்டில் அடைபட்ட கதவை அப்பரைக்
கொண்டு திறக்கவும், தாம் சாத்தவும் பாடி அருள் செய்தார். பாண்டிய நாட்டிற்குச் சென்று பாண்டியன்
வெப்பு நோயை நீக்கிச் சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதம் செய்து வென்றார். திருக்
கொள்ளம் பூதரைத் தொழ வேண்டிப் பதிகம் பாடி ஓடத்தைக் கடத்திச் சென்று ஆலயம் அடைந்து தொழுதார்.
அஞ்செழுத்தாகிய அத்திரத்தால்
புத்த குருவினை இடிவிழுந்து இறக்கச் செய்தார். திருவோத்துரில் ஆண்பனையைப் பெண் பனை
யாக்கினார். திருமயிலையில் பாம்பு படித்து இறந்த பெண்ணின் எலும்பையும் சாம்பலையும் கண்டு
பதிகம் பாடி உயிர் பெற்று எழச் செய்தார். இங்ஙனம் பல அற்புதங்களைச் செய்து பின் சீர்காழியை
அடைந்து திருமணம் முடித்துக் கொண்டு தம் மனைவியாருடனும் உடன் இருந்தாருடனும் திருநல்லூர்
பெருமணம் என்னும் தலத்தில எழுந்த சோதியில் கலந்து இன்புற்றார். இவரது பாடல்கள் மூன்று திருமுறைகளாகும்.
ஏயர்கோன்கலிக்காமர் : இவர்
சோழ நாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் மரபில் ஏயர் குடியில் தோன்றினார்.
இவர் சோழ மன்னன் படைத்தலைவராக இருந்தார். திருப்புன்கூர் தலத்தில் பல திருப்பணிகள் புரிந்தவர்.
மானக்கஞ்சாறர் திருமகளை மணந்தவர். சுந்தரர் தம் மனைவியார் பரவையாரது பிணக்கைத் தீர்க்க
இறைவரைத் தூது போக்கினர் என அவர்மீது சினங்கொண்டு அவர் முகத்திலும் விழிக்கக் கூடாது என்ற
அளவுக்கு வாழ்ந்தவர். இந் நிலையில் இறைவர் கலிக்காமருக்குச் சூலநோய் தோற்றுவித்து, அந்
|