பக்கம் எண் :

88

             காப்புப் பருவம்

திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் நூலில்  “வளவனும் குண்டமண் புரட்டுத் திருட்டுச் சிந்தாமணிக் கதையை மெய்யென்று வரிசை கூற, உளம்மகிழ்ந்து பலபடப் பாராட்டிக் கேட்க“ என்று அறிவிக்கப்பட்டதைக் காண்க.  இது கொண்டே, “சிந்தாமணியை வளவர்கோன் கங்குல் பகல் ஆராய்தர,  ‘ எனப்பட்டது.  சோழ நாடு பெருவளம் வாய்ந்தது, ‘ “ சோழ நாடு சோறுடைத்து “ என்பது ஒளவையார் வாக்கு.  பட்டினப்பாலையில் சோழநாட்டின் சிறப்பைக் கூறுகையில்,

        “  வான் பொய்ப்பினும் தான்பொய்யா
        மலைத்தலைய கடல்காவிரி
        புனல்பரந்து பொன்கொழிக்கும்
        விளைவறா வியன்கழனி “

என்று பொருநர் ஆற்றுப் படையிலும்,

        “சாலிநெல்லின் சிறைவேலி
        ஆயிரம் விளையுட் டாக
        காவிரி புரக்கும் நாடு “

என்று சிலப்பதிகாரத்து இந்திர விழா ஊர் எடுத்த காதையிலும், மற்றும் பல சங்க நூற்களாலும், சேக்கிழார் பெருமானார் சோழநாட்டு வளத்தைக் கூறும்போது,

        காடெல்லாம் கழைக்கரும்பு
            காவெலாம் குழைக்கரும்பு
        மாடெல்லாம் கருங்குவளை
            வயல்எல்லாம் நெருங்குவளை
        கோடெல்லாம் மடஅன்னம்
            குளம்எல்லாம் கடல்அன்னம்
        நாடெல்லாம் நீர்நாடு
            தனைஒவ்வா நலம்எல்லாம்

என்று பாடிக் காட்டுதலாலும் அறியலாம்.

    பெரியபுராணத்துள் பெரிதும் சோழநாட்டு வளத்தை நன்கு காணலாம்.  இத்தகைய வளமுடைய நாட்டை ஆண்ட