பக்கம் எண் :

ஆன

 

       காப்புப் பருவம்

99

    ஆனால் பதினோராம் திருமுறையில் இந்நூல் காணப்படவில்லை. ‘அது செல்லுக்கிரையாயது போலும்’ திருக்கையிலையில் “திருக்கயிலாய ஞான உலா” என்னும் நூலைப் பாடினார்.  இவர்க்குச் சேரமான் பெருமாள் நாயனார் என்ற பெயரும் உண்டு.

    இவர்க்குக் கொடை என்னும் அடை உண்டு என்பது, சேரர்க்கு  இறைவர் எழுதிய திருமுகப் பாசுரத்திலும் “பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின்உதவி” என்று குறித்திருப்பதாலும், சேக்கிழாரும் “பருவமழைச் செங்கை” என்றும்,

        நம்பர் தாளின் வழிபாட்டால்
            நாளும் இன்புற் றமர்கின்றார்
        இம்பர் உலகில் இரவலர்க்கும்
            வறியோர் எவர்க்கும் ஈகையினால்
        செம்பொன் மழையாம் எனப்பொழிந்து
            திருந்து வென்றி உடன்பொருந்தி
        உம்பர் போற்றத் தம்பெருமாற்
            குரிய வேள்வி பலசெய்தார்

என்றும் குறிப்பிடுதல் காண்க.

    வைவேல்   அடைபொருந்தப்   பெற்றவர்  கூற்றுவ  நாயனார்.    இதனை மேலே காட்டப்பட்ட திருத்தொண்டத் தொகைப் பாட்டில் “வேல் கூற்றன்” என்று கூறப்பட்டிருத்தல்  கொண்டு தெளிக.  கூற்றுவ நாயனார் களந்தைப் பதியின் தலைவர்.  குறுநில மன்னர்.  அடியார் பக்தியில் சிறந்தவர்.  ஐந்தெழுத்தை இடையறாது ஓதுபவர்.  இவர் வேற்றரசர்களை வென்று நாற்படை கொண்டு விளங்கினும் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்தார்.  இக்குறையை நீக்கத் தில்லை வாழ் அந்தணர்களிடம் சென்று, தமக்கு முடி சூட்ட வேண்டினார்.  “ அவர்கள் சேர சோழ பாண்டியர்கட்கு மட்டுமே முடிசூடுவோம்” என்று கூறி மறுத்தனர்.  நாயனார் வருந்தித் துயின்றபோது இறைவர் அவர்க்குத் தம் திருவடிகளையே முடியாகச் சூட்டினார்.  அத்திருவடிகளையே முடியாகக்