இவ

56

          சேக்கிழார் வரலாறும் காலமும்

இவ்வூர் திருநாகேச்சரம், நத்தம் என்ற இரு பிரிவுகளுடன் காட்சி அளிக்கிறது.  திருநாகேச்சுரத்திலிருந்து முக்கால் கல் தொலைவில் சென்றால் நத்தம் என்னும் இடத்தை அடையலாம்.  இங்கு மிகப் பழமையான பழுதுபட்ட சைவ வைணவ ஆலயங்கள் உள்ளன.  இங்குள்ள சிவாலயப் பெருமான் கந்தழிப் பெருமான் என்றும் விஷ்ணு ஆலயப் பெருமாள் திருவூரகப் பெருமாள் என்றும் திருப்பெயர் கொண்டு திகழ்கின்றனர். 

        விஷ்ணு ஆலயத்துள் தாயார் சந்நிதிக்கு எதிரே ஒருகல் காணப்படுகிறது.  அது பல வேலைப்பாடுடன் திகழ்கிறது.  அது மிகமிகப் பழமைத் தோற்றத்துடன் இருப்பினும்,, பழுது படாமல் இன்றும் காட்சி அளிக்கின்றது.  அதனை ஒவ்வொருவரும் கண்டுகளித்தல்வேண்டும்.

         குன்றத்தூரின் கோடியில் ஒரு மலையும், ஒரு மண்டபமும் காணப்படுகின்றன.  மண்டபம் பதினாறு கால்களால் ஆயது ;   பதுமைகளுடன் திகழ்கிறது.  குன்றின்மீது சென்றால் முருகப்  பெருமானைக் கண்டு தரிசிக்கலாம்.  முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றனர்.  ஒரு கிணறும் அங்கு உண்டு.  அக்கோயிலின் முன் மண்டபத்தில் ஒரு சுருங்கை செல்கிறது ;  அஃது எங்குச் செல்கிறது என்பது அறிதற்கு இல்லை.  கோயிலுக்கு முன்பு அழகிய மண்டபம் உண்டு. 

        திருநாகேசுரத்தில் உள்ள குடிமக்கள் வளம், குன்றத்தூரில் இல்லை என்னலாம்.  சேக்கிழாரது இளவலான பாலறாவாயர் உண்டாக்கிய பாலறாவாயர் குளத்தினை இன்றும் இங்குக் காணலாம். 

    சேக்கிழார் பிறப்பு :  கரிகாலன் தொண்டை நாட்டை வளப்படுத்தி நாற்பத்தெண்ணாயிரம் குடிகளைக் குடிபுகச் செய்தனன் என்பர்.  அக்குடிகளுள் கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குளப் பாக்கிழான், சேக்கிழான் குடிகள் சிறந்தவை.  சேக்கிழான் என்ற பெயர் கொண்டு