திருநாளைப்போவார்10நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-ஜம்பை.

பல்லவி.

நீசனாய்ப் பிறந்தாலும் போதும்-ஐயா
நீசனாய்ப் பிறந்தாலும் போதும் (நீச)

அனுபல்லவி.

ஆசையுடனம்பலவனடியி லிருந்தேத்தும் (நீச)

சரணங்கள்.

கோதிலாத்துவங்கள்புரிந்தாலும் தங்கள்
    குலவண்மைதவறாதநெறியிலிருந் தாலும்
வேதமுடியாவுமுணர்ந் தாலும்-மாயை
    விலகாதுஒருநாளுந் தொலையாதுதுன்பம் (நீச)

களவுகொலைசெய்துவந் தாலும்-பழி
    காரருடன்எந்நேரங்கூடியிருந் தாலும்
வளமறவேவாழ்வுகெட் டாலும்-நல்ல
    மனிதனவனிடமாகமறலியணு காது (நீச)

ஏத்தகருமங்கள்செய் தாலும்-எங்கும்
    கிடையாதகொடையாளியெனவிருந் தாலும்
கோத்திரக்கீர்த்திமிகுந் தாலும்-எங்கள்
    கோபாலகிருஷ்ணன்தொழும் பாதம்நினைந்தேத்தும் (நீச)

வசனம்.

இப்படியே பக்திசெய்தால் போதும், மற்ற ஜாதி வருணாசிரமங்களினாலே ஒன்றும்
பிரயோஜனமில்லையென்று கூறி உபமன்யர் ஓர் இதிகாசத்தைச் சொல்லுகின்றார்:
“பூர்வத்திலே, தில்லை வெட்டியானென்றும், பெற்றான் சாம்ப