திருநாளைப்போவார்100நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-மோகனம்; தாளம்-சாபு.

பல்லவி.

அடடாநந்தனேதில்லைக்-கனுப்புமென்றெனைக்கேட்ப
தாச்சரியம்மிக வாச்சர்யம்.

அனுபல்லவி.

அடடாகட்டுக்கதைக ளனைத்துமிங் குதவாது
நடடாவயலைத்தேடி நடவுநட விப்போது. (அட)

சரணங்கள்.

ஈனசாதியிற்பிறந்தோ னுனக்கவ்விடத்தி
     லென்னஅலுவ லுண்டு-அல்லவென்று
போனபோதிலும்மூவா யிரவரிருக்கும்வீதி
    புகுந்துநீகடந்து கொண்டு
மானுமழுவுஞ்சிர மாலையணிந்த வுரு
    மாற்றலர்திரிபுர மதனையெரித்த பெரு
மானுக்கியலுந்திரு மஞ்சனோற்சவந் திரு
    வாதிரைப்பலன்பெற மாட்டாய்சொற்படி யிரு. (அடடா)

வேள்விகளொருபுறம்வேதியர்க ளியற்றும்
    மேன்கள்மிகத் தங்கும்-அந்தத்
தாழ்மையிலாத்திவ்யத்தலம்போய் வருவதற்குந்
    தடையில்லையெனப் பொங்கும்
தன்மையிதெல்லாங் கனவாகமுடிய வரும்
    சாதியிழிவையோ சித்தாலேதெரிய வரும்
பன்னிப்பன்னிப்படித்தேன் பாவ மற்றாயெ வரும்
    பட்டால்தெரியும்பறைய னுக்கென்பது போல்வரும். (அடடா)