அல்லும்பகலுஞ்சோ
றளித்துக்காத்திடுந்தெய்வ
மானவம்பல வாணன்-இங்கிருக்க
தொல்லைப்படவோவேண்டா மென்றுரைத்திடுவேன்
சொல்லமறந்தநீ வீணன்
தில்லுமுல்லுமுள்ள பேச்சேதுக்கடா பிடித்
திருக்குமெனதுபிடிதிரும்பாதடா பகடி
பல்லையொடித்து விடுகிறேன் பாரடா தகடி
பஞ்சைப்பயலேசமர்த்துப்
பார்ப்பேனெடடா தடி. (அடடா)
____________
வசனம்.
வேதியர் சொல்லிய சொற்களைக்கேட்ட
நந்தனார் நீங்க ளென்னைத்
தடியாலடித்தாலும்
பிராணனை மடித்தாலும் கழுத்தை யொடித்தாலும்
சிதம்பரத்தில்
நடித்தானைக் காணாமலிருக்கேனென்று
கடுத்துச் சொல்லும்போது, வேதியர் துடித்துச்
சொல்லுவார்.
ராகம்-ஸு ரடி; தாளம்-ஆதி.
பல்லவி.
இனியுன்குற்றத்தைப்
பொறுப்பேனோ-அணுவள
வேனுஞ்சம்மதிப்பேனோ.
அனுபல்லவி.
தனியாம்வேதசாஸ்திரந்
தனையுணர்ந்தாலுஞ் சாதி
தன்புத்திபோகாதென்ற சரித்ரம்பொய்யல்ல
நீதி (இனி)
சரணங்கள்.
பலகாலமும்பழமும் பாலூட்டினாலும்
பாம்பு
பழகாததற்குவொப்பாய்ப்
பகரலாகுமே தீம்பு
|