திருநாளைப்போவார்102நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தலம்விட்டப்புறம்போகத் தான்செய்யாதேடாவீம்பு
     தரையிற்கறந்தபாலுந் தாவுமோமுலைக் காம்பு (இனி)

இடையிலிருக்குமிந்த இடும்பன்கடம்பன்         சரி
     இவர்களல்லாமலிதோ இருப்போர்கள்சிறு    நரி
நடையிலிருப்பேன்மஹா நல்லவனுனக்           கரி
     நானுனைச்சேர்ப்பேனென்று நம்பாதே பரி கரி. (இனி)

வசனம்.

என்று சொல்லிய வேதியருக்கு, நந்தனார் மிகுந்த தாழ்மையோடும்
ஏழ்மையோடுஞ் சொல்ல, வேதியருக்குக் கோபம்வந்து ‘திருட்டுவேடங்கொண்ட
முரட்டுப்பயலே’ என்று மறுபடியுஞ் சொல்லுகின்றார்.

_________

ராகம்-அஸாவேரி; தாளம்-ஆதி.

பல்லவி.

திருட்டுத்தனம் மாத்ரம்வேண்டா மடாவுனக்கு
திருட்டுத்தனம் மாத்ரம்வேண்டாம்.

அனுபல்லவி.

முரட்டுத்தனமாய்ப்பேசாதேநிர்          மூடா
     முன்னும்பின்னுமறியாக்குடி        கேடா
வரட்டுத்தவளைபோல்வா யாடாதே     யேடா
     வயலைமுழுதுஞ்சீர்ப்படுத்திடப்   போடா

சரணங்கள்.

புத்தியுள்ளவனாகப்              பாரு-ஏர்கொண்டுழுது
    புன்செய்நிலமுழுதுஞ்       சீரு-செய்துவிதைத்து