திருநாளைப்போவார்104நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராயன்ராயன்ராயன்ராயன்          சாட்சியாய்
    தீயன்தீயன்தீயன்தீயன்        உனைவிடேன் (திருட்டு)

______________

வசனம்.

இதுவும், வேதியர் சொல்லுகின்றார்.

விருத்தம்.

வானிருந்த விடந்தேடிக் காணாமல் மாதவத்தோர் மதிமயங்கத்
தேனிருந்த செந்தாளைச் சிந்திப்பார் புந்தியுறத் தெளிந்தாரில்லை
ஊனருந்தும் புலையாநீ சிதம்பரத்தே சென்றாலு முண்டோமுத்தி
தானிருந்த விடம்விட்டுப் போகாமல் சஞ்சலத்தைத் தள்ளுவாயே.

வசனம்.

அடா, வாடா, மூடா, கேளடா, என்னைப்போலொத்த பெரியவர்களாலே கூடத் தேடி
அறியப்படாத செகதீசனுடைய திவ்விய நாமத்தை நத்தையுறிஞ்சும் பறையா நீ கத்திக்
குலைக்கலாமா, இப்படிதத்திக்குதிக்கலாமா, வித்தையொன்று மறியாதவனிங்கே பக்தி
பண்ணலாமா, நத்தி முக்தி தேடலாமா, சுத்தமான பெரியோர்களிடத்தே சத்தம் போடலாமா,
இங்கே நித்தம் நாடலாமா, வியர்த்தமான இந்த சென்மமெடுத்தும் ஸித்தி தேடலாமா,
அங்கே புத்தி சொல்லலாமா, அடடா இதையெல்லாம் விட்டுவிடடா, நாற்றைப் பிடுங்கி
நடடா, பண்ணைத் தொழிலைத் தொடடா, தோல்கட்டிய தடியை யெடடா,
யாருந்திருடாமல் பார்த்திரடா, களத்தில் படடா, காவல் கொடடா, புல்லறடா, முரடா,
வழிதெரியாக் குருடா, நான் சொல்வது நேரடா, இதடா உன்செய்கை யென்று
கல்லாலெறிந்து, தடியாலடித்து, வாயால் திட்டி,