தேள்போலே கொட்டி, இவரொரு ஆள்போலே
நின்றார். நந்தனார் நாள்போகுதே
யென்றார்.
வசனம்.
நந்தனார் வேதியரைப்பார்த்து
நீங்களென்னை அடிக்கலாம் நானும் அடிபடலாம்,
தங்களுக்குக் கைநோகுமே யென்று வணங்கிச்
சொல்லுகின்றார்.
ராகம்-பேஹாக்; தாளம்-ஆதி.
பல்லவி.
அடித்ததுபோதுமையே-என்னை-அடித்ததுபோதுமையே.
சரணங்கள்.
அடித்தாலும்உங்கள்
கைவலி
யாதோ
அடிமைவேலைசெய்யும் என்னுடன் வாதோ
படித்ததெல்லாம் என்மனத்திற்
படாதோ
பாவியெனக்கும் இனிமேல்தெரி
யாதோ (அடித்)
நல்லவரேயுங்கள்
மனத்தின்பிர காரம்
நடக்காமலிருந்ததுமேஅப
சாரம்
சொல்லத்தெரியுமோ வெனக்குப
சாரம்
சுகிர்தசாலியுங்க ளாலேயிந்
நேரம் (அடித்)
____________
வசனம்.
நந்தனார் ஐயருக்குத்
தலைவணங்கிச்
சொல்லுவார்.
|