திருநாளைப்போவார்106நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கண்ணிகள்.

ராகம்-மோஹனம்; தாளம்-த்ரிச்ர ஏகம்.

இலவுகாத்தகிள்ளை               யாச்சே - நான்
    எடுத்துச்சொன்னதெல்லாம்    போச்சே
பறையன்சொல்லுபழு             தாச்சே - நீங்கள்
    பார்ப்பாரென்பதுமே           லாச்சே
ஏழைச்சொல்லம்பல              மாச்சே - தெய்வ
    மில்லாமலெங்கையோ        போச்சே
சேரியேசொர்க்கமென்             றாச்சே - தில்லைச்
    சிதம்பரமென்பது              போச்சே
விழலுக்கிறைத்தாற்போ            லாச்சே - எந்தன்
    வேண்டுதல்வீணாகிப்           போச்சே
கண்டதைக்கண்டிட                 லாச்சே - நல்ல
   காலம்பிறக்காமற்               போச்சே.

__________

வசனம்.

நந்தனார் பெரியோர்கள் கோபத்தை இனி எளியேன் தாங்கே னென்று சொல்லுவார்.

லாவணி.

ராகம்-ஜஞ்ஜு டி; தாளம்-ஆதி.

பெரியோர்சினமடையா ரடைந்தாற் பெருங்கடல்தீயாதே
பேயன்தாங்குவேனோ இம்மாத்திரம் பிழைபொறுத்தாளுமையே
அல்லும்பகலும் நானறிந்ததுமேதோ வறியாமல்போனேன்
ஆசைகொண்டேன்திரு வம்பலத்தெய்வம் மோசஞ்செய்யுதையே