திருநாளைப்போவார்107நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பாவியெனைத்தொடர்ந் தடித்தாலுமெந்தன் பாழ்வினைதீராதோ
பார்தனில்பேர்சொல் லாதவனென்றே படைத்ததுபோதாதோ
சிங்கம்பொசித்திடு மிறைச்சியைவேறொரு செந்நாய்தொடலாமோ
சிதம்பரம்நான்தொட லாமோசாதியில் சின்னவனானன்றோ
இன்னமும்சிதம்பரம் போவேனென்று யிங்ஙனேவருவேனோ
இம்மட்டும்போது மையேதய விருந்தா லதுபோதும்

_____________

விருத்தம்.

சேரி வந்தவர் செவ்விய வேதியன் சினத்தால்
காரிரு ளடர்ந்திடுஞ் சோலையி னின்றவன் கருத்தில்
ஏரு லாவிய பரமனற் றாண்மல ரிறுத்தித்
தீர னாகிய நந்தனு மிப்படித் திகைப்பான்.

வசனம்.

நந்தனார் தம் ஐயருக்குத் தலைவணங்கிப் பெரிய கும்பிடு போட்டுப் பிறகு ஒரு
சோலையிலிருந்து சமாதி செய்து கலைந்தபின், தமது சரீரத்தைத் தில்லைவெளியிலே
கலந்துகொள்வேனென்று வீர வைராக்கியத்துடனே சேரியில் வராமல் தம்
துயரங்களையெல்லாம் அம்பலவாணருக்கே ஒப்புவித்துச் சலுகைகெண்டாடிச் சொல்லுவார்.

விருத்தம்.

வேதியரிப் படிசொல்ல வெந்துமனம் வேறாகி வினையோவென்று
சாதியிலே பாவமிது நீயன்றோ பிறப்பித்தாய் சுவாமியென்னைச்
சோதனையோ செய்கின்றா யெவ்வுயிர்க்கு மவ்வுயிராய்த்தோய்ந்திருக்கும்
ஆதிகுரு வலவோநீ பார்ப்பானுக் குள்ளிருந்து மனுப்புவாயே.