கண்ணிகள்,
ராகம்-சௌராஷ்ட்ரம் ; தாளம்-ஆதி.
பல்லவி.
ஐயாவுன்னடைக்கலம்
பொய்யாகும்தேகமிதை
மெய்யாக்கிவிடமனம் நையாதிருப்பதேன். (ஐயா)
அத்தானான்வருவேனோ
அம்பலத்தைப்பெறுவேனோ
சற்றாகிலுங்காண்பேனோ சந்நிதியில்தொழுவேனோ
(ஐயா)
__________
விருத்தம்.
தாறி லாதவிப் பிறவியைத்
தானெடுத் தஞ்சி
தூறு பட்டனற் கீழ்க்குல மாகியித் துன்பம்
நீறு பட்டிடு மல்லவோ தில்லையி
னின்றால்
பேறு பெற்றிடு வேனதற்கும்மொரு பிசகோ.
கண்ணிகள்.
ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-சாபு.
பல்லவி.
ஐயோதெய்வமே யிந்த
வையர்க்கடிமையானேன்
செய்யாவினை செய்தல்லவோ
உள்ளங்கரைந்துருகி யுய்யும்படிகேட்கில்
கல்லுங்கரையு மல்லவோ
ஆலைக்கரும்பதுபோ
லாச்சுதங்கமுழுதும்
வேலைக்கிடமு மில்லையே
பாவியெனக்கோவந்த பார்ப்பான்மனதிரங்கான்
ஆவிதவிக்குதல்லவோ
|