கோவில்கும்பத்தைக்கண்டால்
கோடிவினைகள்தீரும்
பாவிக்குக்கிடையாதுகாண்
தில்லையம்பலவாண தெய்வம்புலையர்க்காக்
கல்லாச்சமையலாச்சுதே
பொன்னம்பலவாவுன்னைப் போற்றும்வகையில்லாமல்
இன்னம்பிறவியேறுமோ
அன்னை தந்தையும்நீயென் னாவிபொருளும்நீயுன்
சந்நிதிவரச்செய்வாயே.
_________
விருத்தம்.
அடிமுடி யொன்று மில்லா வம்பலத்
தரசே யுன்பால்
கொடியனான் வந்தா லென்ன குறையுமோ வதனால்
நீதி
நடலைசெய் பார்ப்பான் கையில்
நடுங்கவோ விடுத்தா யென்றும்
படிமிசை வீழ்ந்தா னாடிப் பதறுவான் கதறுவானே.
லாவணி.
ராகம்-நவரோஜ்; தாளம்-ஆதி.
பல்லவி.
செய்யுமுபாயமறியே னறியேன்
அனுபல்லவி.
அரகரசிவனே தில்லைச்சிவனே.
சரணங்கள்.
பத்துவருட காலமாகவந்து பார்ப்பானைக்கேட்டேன்
சித்தமிரங்கிப் போய்வாவென்றொருநல்ல சேதிசொல்லக்காணேன்
ஐயோ (செய்யு)
|