திருநாளைப்போவார்110நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பாவிபுலையனாய்ப்பிறப்பேனோ யிந்தப்பாரினிலிருப்பேனோ
ஆவிதவிக்குதே அம்பலவாவுன் னடிக்கமலங்காணேன்ஐயோ (செய்யு)

பல்லுமுளைத்தநாள்முதலாகவிந்தப் பாடுகள்படுவேனோ
தில்லைநாயகாகனகாவென்றுனைத் தெரிசிக்கவகைகாணேன்ஐயோ (செய்யு)

நாற்பதுவேலிநிலமிருக்கிறதை நடுகவேணுமென்றார்
காப்பதார்களைபிடுங்குவதாரென்று கடிந்தபேச்சுக்கடியேன்ஐயோ (செய்யு)

ஆற்றிலேகுளத்திலேவிழுவேனென் னாவதைப்பிடித்திழுத்திடுவேன்
பார்த்தினிக்ருபைசெய்யாவிடிற்பறையன் பழிவீண்போகாதுசொன்னேன் (செய்யு)

தில்லைச்சிதம்பரத்தைக்காணாவிடிலென் தேகந்தரியாது
சொல்லிவிட்டேன்பொன்னம்பலவாவுன் சொர்னசபைக்குவருவேன்நானோ (செய்யு)

_____________

விருத்தம்.

கடுவ ருந்தியும் பணிகல னாகவுங் கற்றைச்
சடில மேவிய பிறைபுனற் றரிக்கவுந் தகுமோ
விடுவ தில்லையுன் னருகினிற் றானொரு வேங்கைக்
கொடியன் வந்ததி னாலென்ன தில்லையிற் குறையோ.

மாவ ளர்தில்லை மாநகர் வீதியு மதிலும்
கோவி லுந்திருக் கூட்டமுங் கண்டுகண் குளிரப்
பாவி யாகினேன் காயத்தை யேதுக்குப் படைத்தாய்
ஆவி தானிருந் தும்பர கதிபெற வறியேன்.

ஆதி நாண்முதற் றவம்பெறு மாமுனிக் காக
நாத மோங்கவே நாடகம் புரிந்திடு நாதன்
பாதம் போற்றியெந் நேரமும் பணிந்திடு நந்தன்
ஏதந் தீரவே கனவினி லீசனும் வந்தார்.