திருநாளைப்போவார்112நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விருத்தம்.

அறிவுமிகுந் தாற்றலுடன் சிவபெருமான் பெயர்சொல்லியாற்று நாளி
கறைமருவு மிடற்றழகன் றனதடிமை வெறியகலக் கனவில் வந்து
குறையறவே கழனிகளை நடச்சொன்னோ முனக்குவிடை கொடுக்கே னென்ற
மறையோது மவர்க்குரைத்து நீவிரைந்து வாவென்று மன்றுட்சென்றார்.

நந்தனார் கனவில் நடேசமூர்த்தி சொன்ன

வசனம்.

நம்முடைய நந்தனாரே! உம்முடைய கழனிகளை நமது பூதகணங்களாலே
நடச்சொன்னோம். வேதியருக்குக் காட்டினால் உத்தாரங் கொடுப்பாரென்று சொல்லித் தான்
அம்பலத்தே சென்றார்.

நந்தனார்-நித்திரைநீங்கி வயல்களைக்கண்டு சந்தோஷமடைதல்.

கண்ணிகள்.

ராகம்-ஆனந்தபைரவி; தாளம்-ரூபகம்.

களையெடாமல்சலம்விடாமல் கதிரொருமுழங்காணுமாம்
களிக்குதுபயிரிருக்குதுஅதைக் கட்டுகட்டவேதோணுமாம்
பழுதிலாமலேரிகுளங்கள் பள்ளமேடுதண்ணியாம்
பரமசிவனைப்பணியும்நந்தன்பயிரிடுந்திருப்பண்ணையாம்
கனவில்வந்துஉருவுமாகி கருணைமாரிகண்டவன்
கடுகிநடந்துவேதியரிடங் காணவென்றுசென்றனன்

வசனம்.

நந்தனார் வேதியரைத் தங்கள் நன்செய்நிலத்தைப் பார்க்க வரவேணுமென்று
கேட்டுக்கொள்ள, வேதியர் இவ்விதம் நினைத்துச் சொல்லுவார்.