விருத்தம்.
அய்யரே வாருமென்று
அழைத்திடும் நந்தனாரைத்
துய்யவே தியருங்கண்டு தொல்புவித் தெய்வமெல்லாம்
பொய்யது வென்றுதள்ளிப்
புலையனும் வந்தானென்று
செய்யவேண் டியதுசெய்யச் செப்புவா
னொப்புவானே.
வேதியர் சொல்லுதல்.
ராகமாலிகை-வராளி; தாளம்-ஆதி.
பல்லவி.
நந்தாவுனக் கிந்தமதி வந்த தென்ன
தந்த தாரடா
அநுபல்லவி.
அந்தரங்கஞ் சொந்தமா
யிருந்தது மறந்து போய்
விந்தையாய்நினைந்தன்றோ அந்தவேளை புத்தியில்லை-
(நந்தா)
சரணங்கள்.
தோடி.
கொல்லைக்காட்டு
நரிபோலே பல்லைக்காட்டிப்
பேசுவாய்
கல்லைக்காட்டிக் கோபங்கொண்டு சொல்லைக்காட்டி யேசுவேன்
தில்லையென்று சொன்னதெல்லா மில்லையென்று போச்சுதா
கல்லேயென்று ஐயர்சொன்ன சொல்லேநிச மாச்சுதா
சித்தமுந் தெளிந்துதா உற்றது
வுணர்ந்துதா
பத்தியுந் தொலைந்துதா
கத்தலும் பறந்ததா
சட்டம்-சட்டம்-நல்லது-நல்லது மெத்த-மெத்த-சந்தோஷம்-
(நந்தா)
மத்யமாவதி.
இப்படிஅப்படி
சொல்லாதே தப்பெடுத் தடிப்பையா
சொற்படி யொப்புதலாக
மெய்ப்படிநடப்பையா
|