திருநாளைப்போவார்116நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அஸாவேரி.

வாரிகாலைச் சுற்றிப்பாரு     கோரையைப் பிடுங்கிநம
தேரியை யுழுகச்சொல்லு     வீரியை நடுகச்சொல்லு
செட்டியார் குளத்தருகே     முட்டிருக்கப் பேர்த்தையா
வெட்டியா னகத்தருகே      திட்டிருக்கப் பார்த்தையா- (நந்தா)

புன்னாகவராளி.

    எல்லா முனதுபொறுப் பெல்லா முனதுசுக
    மல்லாமல் வேறே கதியில்லை இல்லை
    கட்டியடிக் கட்டளையில் விட்டதுமுளைத்ததா
    பொட்டைத்திடல் குட்டையிலே நட்டது பலித்ததா
காடுவெட்டி நஞ்சைபண்ணு மாடுகட்டி வைக்கோல்போடு
பாடுபட் டுழைத்தாலன்றோ வீடுகட்டி வாழலாம்- (நந்தா)

___________

வசனம்.

இப்படிச் சொல்லும் வேதியரைப் பார்த்துப் பிறகும் பண்ணையைப்பார்க்க
வாருமென்று நந்தனார் கூப்பிடுவார்.

விருத்தம்.

பண்ணை யாவையும் பாருமென் றழைத்திடப் பரிந்து
கண்ணு லாவிய வேதியன் களிப்புற நந்தன்
பண்ணு லாவும் பொன் னம்பலக் கூத்தனைப் பரவி
யெண்ணி லாவருங் காதல்கொண் டிருந்தனர் தாமே.

வசனம்.

கேவலமாகிய நீசன் சிவகணங்களாலே ஒரு இராத்திரியில் நடவுநட்டு அறுப்பறுக்கும்
வயலை வேதியர் கண்டு ஒன்றுந் தோன்றாதவராகி யுலகவாசனையற்று நின்றார்.