வசனம்.
நந்தனார் அம்பலவாணனைக் கொண்டாடிக்
கூத்தாடுவார்.
கட்கா.
ராகம்-நாதநாமக்ரியை ; தாளம்-ஆதி.
சரணங்கள்.
நந்தனானந்தபரிதமானார்
நந்தனாரும் ஆனந்தமாகினார்
சொந்தமானவயல்வந்து பார்க்கையில்
விந்தையாச்சுபவபந்தமபோச்சுது
சிந்தைதீரவேயந்தரங்கத்தில் (நந்தனா)
நீசசாதியென்றுயேசிப்பேசுமிந்தத்
தோஷிவேதியனுமாசையாகவே
தேசமேற்றுந்தில்லைவாசமாகுநட
ராஜமூர்த்திக்குத்தாசனென்றுவரும் (நந்தனா)
வாரும்வாருமிதைப்பாரும்பாருஞ்சிவ
னாரேவந்துசெயுங்காரியங்களிது
பாரின்மீதுளிணையாருமில்லையென்று
ஊரினுள்ளபெரியோருஞ்சொல்லச்சொல்ல (நந்தனா)
சித்தமீதிலொரு
குற்றமேதுமில்லை
சுத்தமானவிதயத்திலுள்ளசிவ
பத்திபண்ணிவெகுசித்தியாகிவர
முத்திதேடிவருபத்தனென்றுசொலும். (நந்தனா)
|