வசனம்.
வேதியர் நந்தனாரைப்பார்த்துச்
சிவபக்தரை அபசாரம் பண்ணினேனென்று மிகவும்
குழைந்து சொல்லுவார்.
ராகம் - பேகடா ; தாளம் - சாபு.
பல்லவி.
நந்தனாரேயுன்றன் பெருமை
யின்றுகண்டேன்
நானென்வினையை விண்டேன்.
அநுபல்லவி.
விந்தையைக்குறியாமல்
விழலனானறியாமல்
வீம்புக்குக்கச்சுக்கட்டி வீசினேனென்னையாளும்
(நந்த)
சரணங்கள்.
அறியாமனத்தினாலே
யேதேதோபேசியுன்றன்
அருமையைத் தெளியாமற்போனேனே
மெத்த
சிறியோர்செய்தபிழை பெரியோர் பொறுப்ப
ரென்று
செப்பும்வார்த்தையுமக்கே
கனவானே இந்த
முறையுணர்ந்தோர்க்கென்ன தான்சொல்லத் தோணும்
மூடன்மேற்கிருபைவைத்து
முழுதுங்காத்திட வேணும்
நிறைவுற்றவருட்பெற்றோர்க் கேதுநிகராங்
காணும்
நினைக்குமுன்னடிவணங் காதோன்வந்துய்ய
வேணும் (நந்த)
நேற்றுப்பொழுதளவுஞ்
சும்மாவிருந்ததிந்த
நிலங்கள்முற்றும்பயிர்
கள்முளைத்துக் கதிக்கச்
சாற்றுங்கதிர்கள்முற்றிச் சாய்ந்து அறுவடைக்கும்
தக்கதாயிருக்குதே மிகக்கிளைத்து
உமது
ஆற்றல்தனக்குநிக ராவாரோ
யாவரும்
அய்யாவுனதுநல்ல வருளால்நலமே
பெரும்
|