நாற்றிசையோர்களும்
நாடிப்பணிய
வரும்
நாயேன் களிக்கமனம் நயந்துகிருபை
தரும் (நந்த)
குண்டைகளுங்கலப்பைக்
கோலுங்காரும்விதையுங்
கொட்டத்திலிருக்கநீர் செய்தீரோ
அந்த
அண்டர்பணியுந்தில்லை யாண்டவனே யுமக்கு
அடிமையாளாகிவந்து செய் தாரோ
துண்டத்தனத்தாலென் றொண்டுக்கும்மைக் கொண்டேன்
தொல்லுலகத்துள்ளோர் யாருமேசக்
கண்டேன்
தொண்டனானேனுமக்குத் தோதகங்களை விண்டேன்
சொல்லும்பணிகள்செய்து சுகப்படத்துணி
வுண்டேன். (நந்த)
__________
வசனம்.
என்று வேதியர் நந்தனாரைப்பார்த்துச்
சொல்லிப் பின்னுஞ் சொல்லுவார்.
விருத்தம்.
கறைபடுங் கண்டன்றானைக்
கருத்தது பெறவே நோக்கி
குறையறும் நந்தனாரைக் குலமது கீழென் றெண்ணி
மறைபுகல் பெருமையாலே வருத்தினேன் கொடியனென்று
இறைபடு மனம்போலஞ்சி யேங்கியே
யாற்றுவானே.
கண்ணிகள்.
ராகம்-புன்னாகவராளி ; தாளம்-ஆதி.
குத்தமெத்தனைசெய்த போதிலுமுந்தன்
சித்தத்தில்நினையாதே-சிவ
பத்தனென்றறியாமல் பதறிவார்த்தைகள்சொன்ன
பாவந்துலையாதே
புலையர்கள்பரகதி தேடும்படியவர் புண்ணியஞ்செய்வாரோ-உன்னைக்
கலிதீரக்கண்ணாரக் கண்டபேர்களெல்லாங்
காட்சிபெறுவாரோ
|