ராகம்-சங்கராபரணம்;தாளம்-ஆதி.
பல்லவி.
நந்தன் சரித்ரமானந்தம்-ஆனாலுமத்தி
யந்தம் பக்திரச கந்தஞ்-சொல்லச்சொல்ல (நந்தன்)
அனுபல்லவி.
நந்தன் சரித்திரம்வெகு
அந்தம்-சிவனாருக்குச்
சொந்தம் தொலையும் பவபந்தம்-கேட்டபேர்க்கு
(நந்தன்)
சரணங்கள்.
ஏது யிவனைப்போலே
சாது-பூமியிலிருக்
காது அரிது இரு காது-படைத்தபேர்க்கு
(நந்தன்)
வாடி மனதிளகிப்
பாடி-ஹரஹராவென்
றாடி கனகசபை நாடிச் -சேருவேனென்ற
(நந்தன்)
அண்டர் கொண்டாடுஞ்
சோழ-மண்டலந்தன்னைச்சூழ்ந்து
கொண்ட மேற்காநாட்டில் விண்ட-ஆதனூரில்வாழ்
(நந்தன்)
ராகம்-கமாசு; தாளம் - ஆதி.
பல்லவி.
திருநாளைப்போவான்-சரித்திரம்
தேனிலும்பாலினு மினியதுகண்டீர் (திருநா)
அனுபல்லவி.
சித்தமுருகிய சிவயோகிகளுக்
கர்த்தமிதுவென்றே யனுதினம்பணிந்திடும் (திருநா)
சரணங்கள்.
மேதினிபுகழுமாதனூர்விளங்கும்-மாதவம்புரிந்தே
சாதனைபெருகிய
பேதமிலாதவன்-வேதப்பொருளைவிரைந்
தோதும்கருணைகுரு-நாதனைப்பணிந்திடும் (திருநா)
|