உருவமனதறிய வொருவனாலாகாதென்
றுலகம்மொழியாதோ-அது
திறமாச்சுதினியுந்தன் ஜன்மசபலமாச்சு தெய்வமுமிரங்காதோ
ஜாதியிலிழிகுலஞ் சாஸ்திரங்கிடையாது சந்தேகப்படலானேன்-இப்போ
ஆதிசிதம்பர ரகசியம்பாரென்று யனுப்பிவிடலானேன்.
_________
வசனம்.
இப்படி வேதியர் மிகவும்
பரவசமடைந்து நடந்த வரலாற்றைக் கேட்க,
நாளைப்போவார்
கனவிலே ஈசன் வந்து கருணை செய்தா ரென்றார்.
அதற்கு வேதியர்
சொல்லுகின்றார்.
ராகம்-யமுனாகல்யாணி ; தாளம்-ஆதி.
பல்லவி.
நந்தா வுன்கனவினி லெப்படிவந்தார்
வரந்தந்தாரெந்தாய். (நந்தா)
சரணங்கள்.
சந்ததமும்சன காதிமுனிவர்தொழுஞ்
சச்சிதானந்த மூர்த்தியல்லவோ (நந்தா)
ஆதிமுடிவுகிடை யாதபராபரஞ்
சோதியலவோநீச சாதியென்றறிந்தும் (நந்தா)
அண்டரண்டநிறை
கின்றசபாபதிக்
கொன்றும்பேதமில்லை யென்றுதெளிந்தே. (நந்தா)
____________
வசனம்.
வேதியர் தான் செய்த
பிழையெல்லாம் பொறுத்துக் கொள்ளுவீரென்று சொல்வதும்,
நந்தனார்
மறு உத்தரங் கூறுவதும்.
|