திருநாளைப்போவார்121நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தண்டகம்.

ராகம்-எதுகுலகாம்போதி ; தாளம்-ஆதி.

வேதியர் - ஏழைப்பார்ப்பான் செய்திடும்பிழையை
            யேற்றுக்கொள்ளாதே நான்
            இனமறியாதவன் பின்புத்திக்கார
            னென்பதுவும் பொய்யோ.

நந்தனார் - பொய்யாகியவிந்த வுலகத்தைப்பார்க்கும்
            புண்ணியவானே நான்
            புலையனுங்க ளடிமையல்லவோ
            புத்தி சொல்லுமையே.

வேதியர் - புத்தியுண்டு வித்தையுண்டு
            பக்தி கிடையாது வாயால்
            புலம்பினதாலென்ன மனமடங்காது
            போதங் கிடையாது.

நந்தனார் - கிடைக்குஞ்சிதம்பர தரிசனமென்று
            கிருபை செய்யு மையே
            கீழ்க்குலமல்லவோ நாயினுங்கடையேன்
            கீர்த்தி செய்விப்பீரே.

__________

வசனம்.

பரமபக்தனாகிய நீ எனக்கு அடிமைவேலை செய்பவன் போல் வந்தபடியினாலே
என் பிறவிப்பிணி யொழிந்ததென்று வேதியர் சொல்லுகின்றார்.