திருநாளைப்போவார்122நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அறுசீர்க்கழி நெடிலடியாசிரி விருத்தம்.

அவப்பொழுது போனதன்றி மறைமுடிவை
      யுளங்கனிய வறிவி லுன்னித்
தவப்பொழுதுங் கணப்பொழுதுங் கண்டறியாப்
      பாவியெனைச் சார்ந்தா ரன்றோ
சிவக்கொழுந்தி னடிமையென்று பெயரிட்டு
      வேலைகளைச் செய்த தாகப்
பவக்கடலைக் குளப்படிபோல் தாண்டிவரச்
      செய்ததுன்றன் பக்தி தானே.

ஆனந்தக்களிப்பு.

ராகம்- நாதநாமக்ரியை ; தாளம்- மிச்ர ஏகம்.

நந்தா நீசிவ                        பத்தன்-உன்னை
    நம்பாமலேமோச மானேனான் பித்தன் (நந்தா)

பூமிக்குள் நீயொரு                 சித்தன்-இந்தப்
    பூமிக்குநானொரு சாஸ்திரப்ர     சித்தன்
காமிக்குள்ளே வெகு                மத்தன்-உன்னைக்
    கண்டுதரிசித்தோ ரனைவரு      முத்தன் (நந்தா)

படித்துமென்ன வெங்கள்            வேதம்-அதில்
    பார்த்ததில்லையிந்தபகவனற்    கீதம்
எடுத்துச்சொன்னாய் சிவ            போதம்-அது
    ஏற்காமற்போச்சுது யென்பிடி     வாதம் (நந்தா)

தெவிட்டாத சோகமப்                பாநீ-உன்றன்
    தேகமுழுதிலுஞ் சிவன்றிரு       மேனி
பகையாகிய வொரு                 கூனி-போலே
    பழுத்தேனானாலுநீயே யாத்ம    ஞானி (நந்தா)