பவசாகரந்தாண்டிச்
சென்றாய் உள்ளே
பார்த்துணர்ந்துபர
மானந்தங்-கொண்டாய்
தவமாமுனி போலே
நின்றாய்-தில்லைத்
தாண்டவராயனைக் கண்ணால்நீ
கண்டாய். (நந்தா)
___________
வசனம்.
இப்படி வேதியர் சொல்லும்போது,
நந்தனார் மனம் நொந்து கைகால் நடுங்கி
ஐயரைச் சுற்றிவந்து தலைவணங்கி எனக்கு அன்னங்
கொடுத்து ஆடையளித்து
இத்தனைநாளுங்
காப்பாற்றின பெரியவரே உங்களுக்கடிமைவேலை
செய்யு மென்னை
இப்படிப் பெருமையாய்ச் சொல்லவேண்டா
மென்று சொல்லுகின்றார்.
ராகம் - கல்யாணி ; தாளம் - ரூபகம்.
பல்லவி.
ஐயா சொல்லு
வேனே-உம
தடிமைப்பறையன் தானே.
அனுபல்லவி.
மெய்யாகவேயிந்த மேதினிவாழ்
வோர்கள்
வேலைசெய்யூழியர் தம்மையோதாழ் வார்கள். (ஐயா)
சரணங்கள்.
வேம்புக்குயர்ந்த மதுரங்கள்
பூட்டினும்
வீறுமதன்குணம் மாறாதெந்
நாட்டினும்
ஆம்புத்திக்காரனென் னாலேயாவ
துண்டோ
அய்யனருளையல் லாமலும்வே றுண்டோ
(ஐயா)
|