மேவுங்கீரைத்தண்டு மேருவைத்
தாங்குமா
வீசுங்கதிர்முன்மின் னாம்பூச்சி
யோங்குமா
ஆவதழிவதெல்லா மையன்
றன்னாலே
ஆச்சுதென்றாலென்ன வாச்சுது
யென்னாலே
(ஐயா)
முன்னமேசெய்தவினை யின்வ
சத்தாலே
மூடப்புலையனாய் மேவி
யதனாலே
இன்னல்படுவதுட னின்னமும்
வேண்டாம்
ஏந்திக்கொள்ளுமென் றெனைக்கெடுக்கவேண்டாம்.
(ஐயா)
_________
வசனம்.
நந்தனார், தனது ஆண்டையாகிய
வேதியரைப்பார்த்து தங்களுடைய திருவாக்கினால்
என்னையு மிப்படிப்
புகழலாமோ வென்று மிகவும் வணக்கமாய்ச்
சொல்லுகின்றார்.
ராகம்-ஹமீர்கல்யாணி ; தாளம்-ரூபகம்.
பல்லவி.
சின்னசாதியல்லவோ சிதம்பரம்போய்
வருகிறேனான் (சி)
அன்னை தந்தையொருவரில்லை யடைக்கலமென்னையாளவேணும்
(சி)
ஈரமில்லாதநெஞ்சமாகி யிறைச்சிதின்றுவுடல்பெருத்த
(சி)
அல்லும்பகலுமதுவையுண்டு யறிவுமயங்கியாட்டங்கொள்ளும்
(சி)
வசனம்.
இப்படிச்சொல்லிய நந்தனாரைப்பார்த்து
வேதியர் சொல்லுகின்றார்.
ராகம்-தேவமனோஹரி ; தாளம்-ஆதி.
பல்லவி.
ஆருக்குத்தான்தெரியும்
அவர்மகிமை
அம்பலநாடக
மாடியபெருமை.
|