அனுபல்லவி.
பாருக்குள்மாந்தர்கள்
காண்பதுதொல்லை
பதஞ்சலிபண்ணிய புண்ணியஎல்லை.
(ஆருக்கு)
சரணங்கள்.
தேவர்கள்பூமழை கொண்டு
சொரிந்தார்
சித்தவித்தியாதரர் கண்டு
மகிழ்ந்தார்
பாவலர்நாவலர் உள்ளங்
குளிர்ந்தார்
பார்வதியம்மனுங் கூட
விருந்தாள்.
(ஆருக்கு)
காதில்குழையது
விழுந்தது காட்டார்
கண்டும்அன்பரை விண்டிட
மாட்டார்
பாதாளம்நடுங்கவே தாண்டவம்
போட்டார்
பக்தியில்லாதவர் தங்களைக்
கூட்டார். (ஆருக்கு)
பாலகிருஷ்ணன்பணிந் தேத்தும்
ப்ரதாபம்
பகர்ந்திடும்பேர்க்கில்லை
புண்ணிய பாபம்
சீலகுணமருவும் ஞானப்பிர
தீபம்
தேவமனோகர மாகிய
ரூபம்.
(ஆருக்கு)
____________
ராகம்-பைரவி ; தாளம்-சாபு.
பல்லவி.
ஆருக்குப்பொன்னம்பலங் கிருபை
யிருக்குதோ
அவனே பெரியவனாம்.
அனுபல்லவி.
பாருக்குள் வீடுகள் மாடுக ளாடுகள்
பணமிருந்தாலவன் பெரியவனாவனோ.
(ஆரு)
|