திருநாளைப்போவார்126நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

வேதபுராணங்க ளோதினதாலென்ன
    வேலைசூழ்பணைமாத ராலென்ன காரியம்
சாதனையாகவ ராதொருநாளும்
    மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது. (ஆரு)

பாணன்மதங்கள டங்கவேசெய்தகோ
    பாலகிருஷ்ணன்தினந் தொழும்பொன்னம்பல
வாணனென்றாதர வாய்விரும்பாதவன்
    வானவராகிலுந் தானவன்சின்னவன். (ஆரு)

___________

வசனம்.

சிவபக்தியுள்ளவன் பெரியசாதி, சிவபக்தியில்லாதவன் வேதியனாயிருந்தாலுஞ்
சின்னசாதி, ஆனபடியினாலே, திருப்புன்கூரி லுனக்காகப் பரமசிவன் நந்தியை விலக்கித்
தரிசனங் கொடுத்ததும், நீ குளம் வெட்டினதும், ஒரு ராத்திரிகாலத்திலே நாற்பதுவேலி
நிலமும் நடராஜமூர்த்தியே வந்து நடவுநட்டதும், பார்க்கும்போது நீயே மகா புண்ணிய
புருஷனென்று சொல்லவேண்டுமே யல்லாது வேறில்லை. நீ இதுவரையி லெனது
வார்த்தையைத் தட்டினதுமில்லை, ஆகையால், எனக்கு நீ குருவாகிநின்று உபதேகம்
பண்ணென்று வேதியர் சொல்லுகின்றார்.

தண்டகம்.

ராகம்-தோடி ; தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தாநீ-குருவுபதேசம்-நவிலிடவேணும்-நான் கடைத்தேற.