அனுபல்லவி.
நொந்தானான் கதிபெறமாட்டேன்
நோயினும்பிறவிக் கடலிடைவீழ்வேன். (நந்தா)
சரணங்கள்.
மந்தாரப்பூவெடுத்தரனார் மலரடிசாத்தி
வாழவென்னறிவு
சிந்தாமல்வரந்தரவேணும் சிதம்பரரகசியந் தெரிசித்திடவே.
(நந்)
வைத்தாய்கருணைக்கடலுன் மனதிற்சென்றுநீ
நர்த்தனம்புரிந்து
ஒத்தாசைபூதகணங்க ளுரிமையுடன்வந் தூழியஞ்செய்ய.
(நந்)
பெற்றாநீபெரி யவனுந்தன்
பெருமையைநானறி வேனோமூடன்
கத்தாமல்மோசமதானே னம்பிக்கைசொன்னே னற்கதிபெறவே.
(நந்)
_________
கலிவிருத்தம்.
வேத மோடறஞ் செய்திடு
நூற்களை மதித்தும்
பூத னாதரி னடியவர் கடுஞ்சின மடையப்
பாத கம்புரிந் தேனென்று நந்தனைப் பரவி
ஏதந் தீரவே வேதிய ருபசரித் திருந்தார்.
வசனம்.
இப்படிச்சொல்லிய வேதியர்
வார்த்தையைத் தள்ளப் படாமையால், சுற்றிவந்து
தலைவணங்கி ஒரு மூலையை நோக்கி நந்தனார்
சொல்லுவதுபோல் சொல்லுவார்.
ராகம்-புன்னாகவராளி ; தாளம்-ஆதி.
பல்லவி.
ஐயே மெத்தகடினம்-உமக்கடிமை-ஐயே
மெத்தகடினம்.
|