திருநாளைப்போவார்128நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அநுபல்லவி.

பொய்யாதபொன்னம்பலத் தையாயிருக்குமிடம்
நையாதமனிதர்க்கு வுய்யாதுகண்டுகொள்ளும். (ஐயே)

சரணங்கள்.

பாலகிருஷ்ணன் பணிந்திடுஞ் சீலகுரு சிதம்பரம்
மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று
சாத்திரம்-நல்லக்ஷேத்திரம்-சற்பாத்திரம்-ஞானநேத்திரங்-கொண்டு.
வாசியாலே மூலக்கனல் வீசியே சுழன்றுவரப்
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்
டாட்டுமே மனமூட்டுமே-மேலோட்டுமே-வழிகாட்டுமே-இந்த
மானாபி மானம்விட்டுத்-தானாகி நின்றவர்க்குச்
சேனாதி பதிபோலே-ஞானாதி பதியுண்டு
பாருமே-கட்டிக்காருமே-உள்ளேசேருமே-அதுபூருமே-அங்கே
சங்கை யறவேநின்று பொங்கிவரும் பாலுண்டு
அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மை போலவே
நில்லுமே-ஏதுஞ்சொல்லுமே-ஞானஞ்சொல்லுமே-யாதும்வெல்லுமே-இந்த
அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது
பாயுமே-முனைதேயுமே-அதுவோயுமோ-உள்ளேதோயுமே-வேத
மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்தி லேபார்க்குந்
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்தி லேஅவ
தானமே-அது தானமே-பலஹீனமே-பேசாமோனமே-அந்த
முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்
ஆடுவார்-தாளம்போடுவார்-அன்பர்கூடுவார்-இசைபாடுவார்-இதைக்
கண்டாருங் கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை