கலிவிருத்தம்.
வான மேவிய வும்பர்கள்
வாழ்த்திய மறையைக்
கான மேசெயும் வேதிய ரேயுமக்
கடிமை
யீன மாமிழி குலத்தினி லெய்திய நந்தன்
ஞான வாரிகொண் டேயவ ரருளுற நினைந்தார்.
___________
வசனம்.
இப்படி நந்தனார் சொல்ல, வேதியர்
கேட்டுத் திவ்விய ஞானமடைந்து
நந்தனாரைப்பார்த்துச்
சொல்லுகின்றார்.
ராகம்-சாம ; தாளம்-ஆதி.
பல்லவி.
சிதம்பரம்போய்நீர்
வாருமையா நான்
செய்ததெல்லாமப சாரமையா (சிதம்பரம்)
அநுபல்லவி.
சிதம்பரம்போவீர்
பதம்பெறுவீர் வேறே
சிந்தனைவேண்டாம் நந்தனேயினிமேல் (சிதம்பரம்)
சரணங்கள்.
எத்திசையிலுமுமக்
கிணைசொல்லப்
போமோ
பத்தியேமுதலென்று பழகியபெரியவர்
சித்தமுந்தெளிந்தது தெய்வமேநீரென்று
புத்தியும்வந்தது சத்தியமல்லவோ. (சிதம்பரம்)