திருநாளைப்போவார்13நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

மனதினில் குற்றம்இல்லாதவனிந்தை-வஞ்சனைமாயையில்லாதவன்
கனவிலும்நினைவிலும்-சிவபதங்குருபதங்
கருத்துறைகளித்திடப்-பெருத்திடவரசனாம் (திருநா)

சாதிமுறைமைதவறாதவன்பவ-சாகரத்திடைமுழுகாதவன்
பூதமயாதிக-ளாகியவுலகம்
பொய்யிதுமெய்யிது-வல்லவென்றறிந்திடும் (திருநா)

___________

பெரியபுராணச் செய்யுள்.

விருத்தம்.

பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான்
முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்காநாட் டாதனூர்.

வசனம்.

கொள்ளிடத்துக்குச் சமீபமாகிய உலகமெல்லாம் புகழும்படி கீர்த்திபெற்றிருக்கின்ற
அமராபதி, அளகாபுரி பட்டணத்தைத் தோற்கச்செய்யும் மாடமாளிகை கூடகோபுரத்தோடும்
அணிமாவாதி சித்திகள் நிறைந்து திரண்ட செல்வத்தோடும் வேதவேதாந்த தத்வஞானமறிந்து
சாக்ஷாத்காரம்பெற்ற வேதியரோடு மற்ற மூன்று வர்ணாசிரமங்களாலே சூழப்பட்டு பூலோகத்
திலகமென்று சொல்லப்பட்ட ஆதனூரென்னும் கிராமத்துக்கு வெளியில் நன்செய்
நிலங்களாலே சூழப்பட்டிருக்கின்ற கடைஜாதியர் குடியிருக்குஞ் சேரியைக் கொண்டாடிச்
சொல்லுவார். ஏனென்றால், ஸ்காந்த புராணத்தில் அஞ்சுபோக காண்டத்திலே சிவபக்