திருநாளைப்போவார்130நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

இப்படிச் சொல்லிய வேதியரைச் சுற்றிவந்து நந்தனார் தலைவணங்கித் தூர
விலகிநின்று அவரை ஆசீர்வதிக்கச் சொல்லுவார்.

ஓரடியிலிரண்டுவார்த்தை.

நந்தனார்                வேதியர்

சிதம்பரதெரிசனங்கிடைக்குமோ  கிடைக்கும்
சென்மசாபல்லியமாமோ        ஆகும்
பதம்பெறுந்தவநெறியறிகிலேன்  அறிவீர்
பரமசிவனருள்செய்வரோ       செய்வார்
சாதியில்தாழ்ந்தவனல்லவோ   அல்ல
சாத்திரமுறைமைக்குஞாயமோ    ஞாயம்
ஆதியம்பலத்தெய்வம்நாடுமோ  நாடும்
ஆனந்தமடைவேனாவையரே    அடைவீர்.

____________

வசனம்.

வேதியர் நந்தனாருக்கு ஆசீர்வாதம்பண்ணி யனுப்பிய பின்பு நந்தனாருடைய
குணாதிசயங்களைக் கொண்டாடுவார்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்.

அடியவர்கள் மனமிடியப் பேசினதுண் டபராத மனந்த கோடி
படுநரகில் வீழ்வாரென் றெனவுரைக்கும் பாவமது பலித்த தென்று
துடிதுடித்துத் தொடைநடுங்கி நீர்வடித்துச் சிதம்பரத்தே துதிகள் செய்து
படிபுகழுந் திருத்தொண்டர் குணமெல்லா முலகறியப் பகருவாரே.