திருநாளைப்போவார்131நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

இதுவுமது.

சாத்திரக் குப்பையெல்லாந் தள்ளினேன் பதறுபோலே
காத்திரஞ் சுத்தமாச்சு கனிந்திடு முள்ளம்பக்தி
மாத்திர மிருந்தாற்போது மற்றொன்று மில்லைசைவ
க்ஷேத்திர முழுதுஞ்சுற்றிச் சேருவேன் றில்லையென்றார்.

ராகம்-சௌராஷ்ட்ரம் ; தாளம்-ஆதி.

பல்லவி.

எந்தநேரமும் நந்தனை சிந்தித்தா
னந்தமாகி யிருந்தன ரந்தணர். (எந்தநே)

சரணம்.

பந்தந்தீரவே யிந்தவுருவாகி
வந்துதோ வரந்தந்துதோசிவனென்று. (எந்தநே)

___________

வசனம்.

விட்டுதோ இந்தவீட்டுக் கவலைகள் பட்டதோ பவசாகரச் சேறழித்திட்டதோ
முத்திவெள்ளம் கரைபுரண்டதோ வென்று ஏங்கித் தொழுது எந்நேரமும் வேதியர்
இப்படியே சிவபக்தி பண்ணிக்கொண்டு ஆனந்தமடைந்திருந்தார். இப்படியிருக்க, நந்தனார்
ஆதனூரைவிட்டுச் சிதம்பரத்தை நோக்கி வருகின்றார்.

ராகம்-லாவணி ; தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தன் சிதம்பரம் வருகின்றார்.