திருநாளைப்போவார்133நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

     அரகரசாம்ப சதாசிவனேபொன்
           லம்பலத்தாடிய தேசிகனே
ஐயேயுன்னடிமை-மனது-நையேனுன்னுடைமை. (நந்த)

     செழித்துவியனுல கெட்டிச்சிகரங்க
         ளைந்துந்தெரியுது காணையே
தில்லைத்தலமென்பார்-அன்புடன்-சொல்லப்பலமென்பார். (நந்த)

     குதிப்பாரொருதரங் களிப்பார்கண்ணீ
         ருதிர்ப்பாரானந்த லாகிரியால்
கொண்டானடிப்பாரே-குரவை-நன்றாய்ப்படிப்பாரே (நந்த)

     பாரளந்தகோ பாலகிருஷ்ணன்துதி
          பாடுந்திருவடி பணிவேனோ
பரகதியடைவேனோ-பூமியில்-மறுபடிவருவேனோ. (நந்த)

_________

வசனம்.

நந்தனார் ஆதனூரைவிட்டுக் கொள்ளிடத்தருகில் வரும் போது சொல்லுகின்றார்.

கோலாட்டமெட்டு.

ராகம் - முகாரி ; தாளம் - ஆதி.

பல்லவி.

கொள்ளிடக்கரைபோனான் - நந்தன்
கோபுரங்களைக்கண்டான்.

அனுபல்லவி.

பள்ளச்சாதியிலும் பறைச்சாதிநானென்று
உள்ளமுருகியவன் வெள்ளங்கரைபுரள, (கொள்)